
தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 440 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 92,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாள்களாக காலை, மாலை என இரு நேரங்களில் தங்கம் விலை மாற்றமடைந்து வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சவரன் கடந்த அக். 7 ஆம் தேதி ரூ. 90,000-யைக் கடந்தது. அடுத்த 3 நாள்களிலேயே (அக்.11) ரூ. 92,000 -யை எட்டியது.
இன்று(திங்கள்) காலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.92,200- க்கு விற்பனையான நிலையில் மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 440 உயர்ந்துள்ளது.
அதன்படி ஒரு சவரன் ரூ. 92,640-க்கும் ஒரு கிராம் ரூ. 11,580-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று காலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்த நிலையில் மேலும் ரூ. 2 உயர்ந்து தற்போது ஒரு கிராம் ரூ.197-க்கும், ஒரு கிலோ ரூ.1,97,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதனால் மக்கள் அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.