தவெகவின் முழு தேர்தல் அறிக்கை வரும் ஏப்.16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று திருப்பூரில் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 நாள்களே இருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஏப். 14) திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை நாள் என்பதால், அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால், பெருமாநல்லூரில் இருந்து பூலுவப்பட்டி வரையிலான விஜய்யின் சாலை வலம் ரத்து செய்யப்பட்டது.
விஜய்யின் சாலை வலம் ரத்து செய்யப்பட்டதால், நீண்ட நேரமாக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
விஜய் திருப்பூர் பிரசாரத்தில் பேசும்போது, “தவெகவின் முழு தேர்தல் அறிக்கை வரும் ஏப்.16 ஆம் தேதி வெளியிடப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து தவெக அரசு பரிசீலிக்கும்.
பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாசாரத்தை தமிழக வெற்றிக் கழகம் முடிவுக்குக் கொண்டுவரும். காவலர்களின் அடிப்படை மாத ஊதியம் ரூ.18,000-ல் இருந்து ரூ. 25,000 ஆக உயர்த்தப்படும்” என்றார்.
Summary
TVK leader Vijay has announced in Tiruppur that the party's full election manifesto will be released on April 16.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலூரில் விஜய் பிரசாரம் நடைபெறுமா? புதுவை தேர்தலால் ஒத்திவைப்பு!

கொளத்தூர் தேர்தல் பிரசாரம்! விஜய் மீது வழக்குப்பதிவு!
விஜய்யின் நாளைய தேர்தல் பிரசார பயண விவரம்!

இந்த தேர்தல் இருமுனைப் போட்டி மட்டும்தான்: விஜய்
வீடியோக்கள்

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை


