உலக சமாதானப் போராளி வெண்புறா இதழின் ஆசிரியர் இரா.கோபாலன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
உலக சமாதானப் போராளி எழுத்தாளரும், வெண்புறா இதழின் ஆசிரியர் மற்றும் சமூக மற்றும் கலை இயக்கிய செயற்பட்டாளுமான ரா.கோபாலன் ஞாயிற்றுக்கிழமை (ஆக 2) இரவு கோயம்புத்தூரில் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை தருகிறது.
கோவை வேலாண்டிபாளையத்தில் பிறந்தவர் மறைந்த இரா.கோபாலன் பள்ளி மாணவப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டவர். 1948 இல் கோவையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தொண்டராகப் பணியாற்றினார்.
ஆசிரியர் பி.என்.ரங்கசாமி மூலம் கம்யூனிச கருத்தியலுக்கு ஈர்க்கப்பட்டார். 1952 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.ரமணிக்கு ஆதரவாகத் தேர்தல் பணியாற்றினார். 1956 இல் பாலக்காட்டில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்குப்பின், வேலாண்டிபாளையத்தில் தொடங்கப்பட்ட கட்சியின் முதல் கிளையின் செயலாளராக கோபாலன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டுறவுத்துறையில் பயிற்சி பெற்று கூட்டுறவு பால் சங்கத்தில் பணியாற்றி சிறந்த கூட்டுறவு ஊழியரானார்.
1958 இல் காரைக்குடியில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். கட்சியின் பெரியநாய்க்கன்பாளையம் பகுதியில் கட்சியைக் கட்டுவதில் தீவிர பங்களிப்பு செய்தார்.
1979 இல் இஸ்கஸ் அமைப்பின் சார்பில் 30 நாள்கள் வட இந்திய சுற்றுப்பயணக்குழுவில் பங்கேற்றார். அவரது சமாதான இயக்கப்பணி தீவிரமாகியது. 1981 இல் சோவியத் யூனியனுக்குப் பயணம், 1981 இல் சமாதான இயக்கப் பொறுப்பு, 1984 இல் கோவை சமாதான விழா, 1985 இல் தமிழ்நாடெங்கும் இருவார கால சமாதான நடை பயணம், 1986 இல் டென்மார்க் கோபன்ஹேகன் உலக சமாதான மாநாட்டில் பங்கேற்பு, 1987 இல் கோவை இளைஞர் சமாதான விழா 1986ல் “சமாதான வெண்புறா” இதழ் தொடக்கம் என அவருடைய பணிகள் சிறப்புற்றது. 1997 இல் கோவை கலவரம், 1998 இல் கோவை குண்டு வெடிப்புகளை அடுத்து கோவை மக்களிடையே மதநல்லிணக்கப் பணி என கோபாலன் அவர்களின் சமாதான இயக்கப்பணிகள் எண்ணற்றவை.
கோவை மாநகர மக்கள் இயக்கம், ஊழல் எதிர்ப்பு இயக்கம், நல்லாட்சிக்கான மக்கள் கூட்டமைப்பு என ஓய்வின்றி இயங்கி வந்த கோபாலன் சில ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமான உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பொது நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக இரா.கோபாலன் இயற்கை எய்தினார். இரா.கோபாலன் அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது அஞ்சலியை செலுத்துகிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
Summary
On the passing of R. Gopalan, editor of the 'Venpura' magazine and a champion of world peace...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர்தான்! அமைச்சர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

இலவசமாக 25,000 பேருக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி! அரசுப் பள்ளி ஆசிரியரின் தவப்பணி!

16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government




