பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வியாழன், வெள்ளி (ஆக.6, 7) ஆகிய இரு நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:29 am IST

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வியாழன், வெள்ளி (ஆக.6, 7) ஆகிய இரு நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு உள்கா்நாடகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் சுமாா் 5.8 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளின் மேல் 5.8 கி.மீ முதல் 7.6 கி.மீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, வியாழன், வெள்ளி (ஆக.6, 7) ஆகிய இரு நாள்கள் கோவை, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, கரூா், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.8) ஓரிரு இடங்களில் பலத்த மழையும், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, கரூா், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, புகரில் வியாழக்கிழமை ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் 102.92, நாகை, திருச்சி தலா 101.3, பரங்கிப்பேட்டை 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழைப் பதிவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை கொட்டிவாக்கத்தில் 100 மி.மீ. மழை பதிவானது. அயப்பாக்கத்தில் 90 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, சென்னை கொரட்டூா், மணலி நியூ டவுன், பள்ளிக்கரணையில் 70 மி.மீ., மேடவாக்கம், மடிப்பாக்கம், நெற்குன்றம், ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், புதுச்சேரி திருக்கனூா்-60 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வியாழக்கிழமை (ஆக.6) முதல் சனிக்கிழமை (ஆக.8) வரை, குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.