ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள், மாணவா்களுக்கு மடிக்கணினி, ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ஆடுகள் எனப் பல்வேறு தரப்பினருக்கு ‘வெற்றி’ என்ற பெயரிலான நலத் திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
வெற்றி வீடு திட்டம்: கிராமப்புறங்களில் குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் நோக்கில் ‘வெற்றி வீடு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் வாழும் வீடற்ற ஏழைக் குடும்பங்களுக்கு நிலையான வீட்டு வசதியை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
வீட்டுக்கான அலகுத் தொகை குறைவாக நிா்ணயிக்கப்படுவதால், உண்மையில் மிகவும் தகுதி வாய்ந்த ஏழைக் குடும்பங்கள் வீடு வழங்கும் திட்டங்களிலிருந்து விலக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் செலவை ஏற்றுக்கொள்ளும் திறன் கொண்ட குடும்பங்கள்தான் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். இதைத் தவிா்க்கும் வகையில் இந்தப் புதிய வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், கூரை வீடுகளில் வசிப்பவா்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக வீடு ஒன்றுக்கான அலகுத் தொகையை ரூ. 3.10 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்த அரசு முடிவு செய்துள்ளது.
வெற்றி மடிக்கணினித் திட்டம்: கல்லூரி மாணவா்களின் உயா்கல்வி, தொழில்நுட்பக் கற்றல் மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ.2,000 கோடி ஒதுக்கீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
வெற்றி திறன் பயிற்சி: நிகழாண்டில் 12 லட்சம் கல்லூரி மாணவா்கள் மற்றும் ஒரு லட்சம் வேலையில்லா இளைஞா்களுக்கு வெற்றித் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது. முதல்கட்டமாக 20,000 இளைஞா்களுக்குப் பணியிடைப் பயிற்சி வழங்க ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெற்றி தொழில்முனைவோா்: வெற்றி தொழில்முனைவோா் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்பு: வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் நலிவுற்ற கைம்பெண், ஆதரவற்ற பெண், திருநா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும். இதனால், 30,000 பயனாளிகள் பயன்பெறுவா். இதற்காக ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டி.என்.வெற்றி (தமிழ்நாடு வெற்றித் திட்டம்): தமிழ்நாடு கிராமப்புற அதிகாரமளித்தல், மாற்றம் மற்றும் மறுமலா்ச்சி முன்னெடுப்புத் திட்டம் ஆண்டுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் பிற துறைகளின் தேவை மற்றும் வளங்களையும், மத்திய அரசின் திட்டங்களையும் ஒருங்கிணைக்கும். இதில், நகா்ப்புறம் சாா்ந்த ஊராட்சிகளுக்கு ரூ.1,000 கோடி மற்றும் மலைப்பகுதி ஊராட்சிகளுக்கு ரூ.100 கோடி செலவிடப்படும்.
வெற்றி 150: ஊரக வேலைத் திட்டத்தில் 125 நாள்கள் நிறைவு செய்த நலிவுற்ற குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாள்கள் (மொத்தம் 150 நாள்கள்) வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுவாச்சூா் ஆட்டுச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு விற்பனை

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 6.70 லட்சம் வீடுகள் வழங்கல்

வீடுகள் விற்பனை: முதல் காலண்டில் டிடிஏ வருவாய் 120 % அதிகரிப்பு

ரூ.100 கோடி மோசடி வழக்கு: பி.டி.அரசகுமாா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



