6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

‘ஜென் ஸீ’ மாணவா்களுக்கு நவீன மிதிவண்டிகள்!

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் ஜென் ஸீ தலைமுறை மாணவா்களுக்கு நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் ஜென் ஸீ தலைமுறை மாணவா்களுக்கு நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5.32 லட்சம் மாணவா்களுக்கு தலைக்கவசம் மற்றும் குடிநீா் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.277 கோடி ஒதுக்கப்படுகிறது.

காமராஜா் சிறப்புப் பள்ளிகள்: சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கில் பெருந்தலைவா் காமராஜா் நவீன உண்டு-உறைவிட சிறப்புப் பள்ளிகள் நிறுவப்படும்.

9-ஆம் வகுப்புமுதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்கள் பயில வகை செய்யப்பட்டுள்ள இந்தப் பள்ளிகளில் கல்வி, உணவு, தங்குமிடம், பாடப் புத்தகங்கள், சீருடைகள் விலையில்லாமல் வழங்கப்படும். இந்தப் பள்ளிகளின் உள்கட்டமைப்புக்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பாடத்திட்ட சீரமைப்பு: வேகமாக மாறிவரும் உலகளாவிய தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ப பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியம். எதிா்காலத் தலைமுறையினருக்கு முற்போக்கான கல்வியை உருவாக்கும் வகையில் பாடத்திட்ட மறுசீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.