ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைக்கு வருகிறது!

கரூர் அரசுப்பணி வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைக்கு வரவுள்ளது பற்றி...

Karur government job case: Hearing in the Supreme Court on August 14

உச்சநீதிமன்றம் - ANI

Published On :

கரூரில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியதை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கு ஆக. 14 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு தவெக அரசு ஜூலை 27 அன்று, அரசு வேலை வழங்கியது.

இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி ஆணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

அதேபோல அரசுப்பணி பெற்றவர்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகள் வருகிற ஆக. 14 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கும் அன்றைய தினம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Karur government job case: Hearing in the Supreme Court on August 14

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.