/

பயிர்க் கடன் தள்ளுபடி, மேக்கேதாட்டு விவகாரம்: அதிமுக இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

தவெக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து...

News image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :7 வினாடிகள் முன்பு

முழுமையாக பயிர்க் கடன் தள்ளுபடி, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று (ஆக. 14) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கின்றனர்.

தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி, முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை என்று தவெக அரசுக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், தவெகவின் வாக்குறுதிகளின்படி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி கோரியும், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு மெத்தனப் போக்குடன் இருப்பதாகவும்கூறி, அதிமுக இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

தஞ்சாவூரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவிருக்கிறார்.

இருப்பினும், தவெக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று நடைபெறவுள்ள அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

Summary

Crop loan waiver, Mekedatu issue: AIADMK to stage protests across Tamil Nadu today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.