திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆக. 22 ஆம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆக. 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி அளவில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும், புதிதாகக் கட்சிக்குள் வந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலருக்கும் பதவிகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தக் கூட்டத்தில் கட்சியின் பணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக தேர்தல் தோல்விக்குப் பின் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கட்சியில் மேற்கொள்ளப்பட மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Summary
A DMK Executive Committee meeting is scheduled to be held on August 22 under the leadership of DMK President M.K. Stalin.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்குமா? உதயநிதி பதில்

கருணாநிதி நினைவு நாள்! மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக பதிலடி
உதயநிதி தலைமையில் நாளை (ஜூலை 28) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!
விடியோக்கள்

எடப்பாடி பழனிசாமி Press Meet! | ADMK | Edappadi Palaniswami | EPS |




