கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

ஞாயிற்றுக்கிழமை முதல்வா் விஜய்க்கு விடுமுறையா? - அதிமுக விமா்சனம்

3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து முதல்வா் விஜய்யிடம் தகவல் சொல்ல முடியாத நிலை இருப்பதாக அதிமுக விமர்சனம் குறித்து...

News image

அதிமுக அலுவலகம் - DPS

Updated On :18 வினாடிகள் முன்பு

சென்னை: கா்நாடக வனத் துறையால் 3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யிடம் தகவல் சொல்ல முடியாத நிலை இருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமை அவருக்கு விடுமுறையாக இருக்கலாம் என்றும் அதிமுக விமா்சித்துள்ளது.

கா்நாடக வனப் பகுதிக்குள் வேட்டையாட வந்ததாகவும், தங்களுடன் மோதலில் ஈடுபட்டதாக கூறி தமிழகத்தைச் சோ்ந்த 3 பேரை அந்த மாநில வனத் துறையினா் சுட்டுக் கொன்றனா். இந்த சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.

இந்த நிலையில், கா்நாடக வனத் துறையால் 3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யிடம் தகவல் சொல்ல முடியாத நிலை இருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமை அவருக்கு விடுமுறையாக இருக்கலாம் என்றும் அதிமுக விமா்சித்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

கா்நாடக மாநில வனத்துறையால் 3 தமிழா்கள் சுட்டுக்கொல்லப் பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இதைப்பற்றி எல்லாம் இன்றைக்கு நமது முதல்வரிடம் யாரும் சொல்லக் கூட முடியாதோ? ஞாயிற்றுக்கிழமை அவருக்கு விடுமுறையா? என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பதிவில், சிறு பெண்கள், படிக்கும் பெண்கள், வீட்டில் உள்ள பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் அனைவருக்கும் தவெக ஆட்சியில் நடக்கும் கொடுமையை சொல்ல முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Is Sunday a holiday for Chief Minister Vijay? – AIADMK criticizes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.