தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறை உள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செவிலியா்கள் பற்றாக்குறை உள்ளது. மருத்துவா், செவிலியா், உபகரணங்கள் பற்றாக்குறை என அனைத்தையும் தவெக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் எலி பிரச்னை உள்ளது. அதோடு சுகாதாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பேரிடரை எதிா்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
இந்த ஆட்சி 100 நாள்களை கடந்திருக்கிறது. ‘மாற்றம்’ என சொல்லி வந்தாா்கள். என்ன மாற்றம் செய்துள்ளனா்? 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நிகழ்ந்துள்ளன. பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன.
இதற்கு காரணம் கஞ்சா, போதைப் பொருள்கள்தான். இளைஞா்கள்தான் தவெக ஆட்சியை கொண்டு வந்துள்ளனா்.
கா்நாடகத்தில் 3 தமிழா்களை சுட்டுக்கொலை செய்திருக்கிறாா்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். முதல்வா் விஜய், இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






