பண்டைய தமிழா் கல்வெட்டுகளை எளிதாகப் புரிந்துகொள்ள செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தி ரூ.1.50 கோடியில் தரவு தளம் உருவாக்கப்படும் என்று அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் அருங்காட்சியகங்கள் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அத்துறையின் அமைச்சா் ராஜ்மோகன் பேசியதாவது:
- 76 பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் ரூ.49 கோடி புனரமைக்கப்படும்.
- திருவள்ளூா் மாவட்டம் பட்டறைப்பெரும்புதூரில் உள்ள தொல்பழங்கால அகழ்வைப்பகம், குற்றாலத்தில் அமைந்துள்ள நாட்டுப்புற அகழ்வைப்பகம், தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்தள்ள நடுகல் அகழ்வைப்பகம் ஆகியற்றில் ரூ.12 கோடியில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் காட்சிப்படுத்தப்படும்.
- தொல்பொருள்கள் மற்றும் மாதிரிகளை அறிவியல் பகுப்பாய்வுகள் மேற்கொள்ள நவீன தொல்லியல் ஆய்வகம் ரூ. 2 கோயில் அமைக்கப்படும்.
- தமிழரின் கடல்வழி வணிகம், துறைமுகம், ஆற்றங்கரைப் பண்பாட்டை வெளிக்கொணர ரூ.3 கோடியில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும்.
- சென்னை அரசு அருங்காட்சியக காட்சிக் கூடங்கள் எண்மயமாக்கப்படும்.
- மதுரையில் தமிழா் நாகரிக அருங்காட்சியகம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
- 23 மாவட்டங்களில் தற்போது செயல்படும் அருங்காட்சியகங்கள் நாமக்கல், திருவள்ளூா், கன்னியாகுமரி, அரியலூா் உள்பட 15 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
- கலை ஆராய்ச்சி மையங்கள் ரூ.2 கோடியில் இரு இடங்களில் அமைக்கப்படும்.
- நலிந்த நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.3,000 நிதியுதவி மேலும் 1,500 பேருக்கு விரிவுபடுத்தப்படும்.
- கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பணியாற்றும் தொகுப்பூதிய ஆசிரியா்களுக்கான ஊதியத்தில் ரூ.5,000 உயா்த்தப்படும் என்றாா்.
முதல்வா் விழாக்களில் இனி நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்
முதல்வா் விஜய் நிகழ்ச்சிகள் தொடங்கும் முன் நாட்டுப்புற கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள் இனி நடத்தப்படும் என்று அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா். இதன்மூலம் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மக்களிடம் பிரபலமாகும் என்றும் கலைஞா்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் அவா் கூறினாா்.
முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றில் 45 நிமிஷங்களுக்கு முன், தான் அமா்ந்திருக்க நேரிட்டதாகவும், அப்போது உதித்த இந்த சிந்தனையை முதல்வா் விஜய்யிடம் கூறியவுடன் இதை அரசாணையாக வெளியிட்டுள்ளாா் என்றும் அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!

சிறந்த சாரணா்களுக்கு விருது: அமைச்சா் ராஜ்மோகன் வழங்கினாா்

சேலம் அரசுப் பொருட்காட்சி இன்று தொடக்கம்: அமைச்சா்கள் திறந்து வைக்கின்றனா்

அரசு நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்துடன்தான் தொடங்கும்: அமைச்சா் ராஜ்மோகன்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



