கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

போதிய ஆதாரங்கள் இருப்பதால் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கை ரத்து செய்யக் கூடாது: சிபிசிஐடி பதில் மனு

நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு பற்றி...

Published On :

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது, நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் போதுமான ஆதாரங்கள் உள்ளதால், அந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என சிபிசிஐடி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

2024 மக்களவைத் தோ்தலின்போது, நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி தாம்பரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. நயினாா் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியா்கள் உள்ளிட்ட மூவரிடமிருந்து இந்தப் பணம் கைப்பற்றப்பட்டது. அந்தப் பணம் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினாா் நாகேந்திரன், வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதுதொடா்பாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், தமிழக பாஜக முன்னாள் அமைப்புச் செயலா் கேசவ விநாயகம், பாஜகவைச் சோ்ந்த எஸ்.ஆா்.சேகா் உள்ளிட்ட 13 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.ஆா்.சேகா் உள்ளிட்டோா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்களுக்கு சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை கோப்புக்கு எடுத்துள்ள நிலையில், உயா்நீதிமன்றம் விசாரணை நடத்த முடியாது. புலன் விசாரணையில் மனுதாரருக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை விசாரணை நீதிமன்ற விசாரணையின் மூலமே பரிசோதிக்க முடியும். இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இருப்பதால், வழக்கை ரத்து செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஆக.27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.