இலவசத்திற்குள் ஒரு இலவசமா? தங்க மோதிர பணி ஆணைக்கு கிருஷ்ணசாமி கண்டனம்
இலவசத்திற்குள் ஒரு இலவசமா என்று தங்க மோதிர பணி ஆணைக்கு கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்
இலவசத்துக்குள் ஒரு இலவசமா? விஜய் அரசின் ஏமாற்று வேலை? தமிழக மக்களின் தரவுகளை ’கார்ப்ரேட்களிடம்’ தாரைவார்க்கும் விஜய் அரசு என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் அறிவித்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், மோதிரங்கள் வாங்க ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, இரண்டு தங்க நகைக் கடைகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ’செய்கூலி இல்லை என்று ஒரு பைசா செலவில்’ தங்க மோதிரம்’ திட்டத்தை கைப்பற்றி இருக்கும் நிறுவனம் 2026 செப்டம்பர் 15 ஆம் தேதி வழங்கப்படவுள்ள 1,28,499 மோதிரங்களை மட்டும் செய்வதற்கான ஒப்பந்தமா? ஐந்தாண்டிற்கான ஒப்பந்தமா? என்பதை அரசு தெளிவுப்படுத்தப்படவில்லை!
ஆதாயம் இல்லாமல் நகைக்கடை இதில் இறங்கவில்லை. அரசு இயந்திரத்திற்குள் தனது ஆதிக்கத்தை ஆக்டோபசை போல கால் பதித்து கொள்ளவும், இன்றைய அரசிடம் தனது செல்வாக்கைப் கொண்டு லட்சக்கணக்கான மக்களிடம் தங்கள் நிறுவனத்தை எளிதாக விளம்பரப்படுத்தி, சிறு மீனைப் போட்டு பெரிய மீனை பிடிக்கும் கார்ப்பரேட் உத்தியே இது;
தமிழக மக்களின் விலைமதிப்பற்ற தரவுகளை திருடவும், தமிழகத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக் காடாக்கவும் இடம் கொடுக்கும் விஜய் அரசின் செயல் அறவே தவறானது. எனவே, ஒரு பைசா ’மோதிரத் திட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கிருஷ்ணசாமி வலியுறுத்தியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






