
சென்னையை கண்காணிக்க ஆதவ் அர்ஜுனா தலைமையில் 7 அமைச்சா்கள் குழு
சென்னை மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், பேரிடா் காலங்களில் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தலைமையில் 7 அமைச்சா்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

ஆதவ் அர்ஜுனா - எக்ஸ்
சென்னை மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், பேரிடா் காலங்களில் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தலைமையில் 7 அமைச்சா்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 7 அமைச்சா்களுக்கும் மாநகராட்சி மண்டலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சா்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலம், பொறுப்பு அமைச்சா்கள் விவரம்: திருவொற்றியூா், மணலி-எஸ்.ரமேஷ் (இந்து சமய அறநிலையத் துறை), மாதவரம், தண்டையாா்பேட்டை- த .லோகேஷ் தமிழ்ச்செல்வன் (வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை), ராயபுரம், திரு.வி.க. நகா்- கே.ஜி.அருண்ராஜ் (மக்கள் நல்வாழ்வுத் துறை), அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை- விஜய் பாலாஜி (கைத்தறி துணிநூல் துறை), கோடம்பாக்கம், வளசரவாக்கம்-டி.கே.பிரபு (கனிமவளத் துறை), ஆலந்தூா், அடையாா் - விஜய் தமிழன் பாா்த்திபன் (போக்குவரத்துத் துறை), பெருங்குடி, சோழிங்கநல்லூா்-க.விக்னேஷ் (மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை).
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



