தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் மோடி அரசின் துரோகப் போக்கு: மாணிக்கம் தாகூர்

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் மோடி அரசின் துரோகப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறுகிறது என்று மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு குறித்து...

மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர் - DPS

Updated On :

தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளை நசுக்கி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் மோடி அரசின் துரோகப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியைத் தடுத்து நிறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.109 கோடியை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.1,788 கோடி, 2025-26 இல் ரூ.1,496 கோடி, நடப்பு 2026-27 நிதியாண்டில் ரூ.1,825 கோடி என மொத்தம் ரூ.5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பெயரளவில் ஆர்டிஇ திட்டத்திற்கு ரூ.714 கோடியை மட்டும் பெயரளவுக்கு விடுவித்துவிட்டு, பள்ளிக் கல்விக்கான ஒட்டுமொத்த நிதியையும் பிடித்து வைத்துப் பிளாக்மெயில் செய்வது வெட்கக்கேடானது.

மத்திய அரசின் நிதியுதவி இல்லாத போதிலும், தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2,014 கோடியையும், நடப்பாண்டில் ரூ.647 கோடியையும் ஒதுக்கிப் பள்ளிகளை நடத்தி வருகிறது. ஆனால், மோடி அரசின் இந்த அதிகார மமதையால் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் பள்ளிக் கட்டமைப்புப் பணிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன.

மும்மொழிக் கொள்கை விலக்கு உள்ளிட்ட தமிழகத்தின் நியாயமான குரலை நசுக்கி, பி.எம்.ஸ்ரீ. மற்றும் தேசிய கல்விக் கொள்கையை (என்இபி) கட்டாயமாகத் திணிக்கத் துடிக்கும் மோடி அரசின் அரசியல் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா? இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்.

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அநீதியை உடனடியாகக் கைவிட வேண்டும். எந்தவித நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய ரூ.5,109 கோடி கல்வி நிதி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்கக் கோரி மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதியிருப்பதாக மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

Summary

Regarding Manickam Tagore's allegation that the Modi government's treacherous attitude-which jeopardizes the future of students is crossing all limits day by day...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.