

திமுக அரசின் ஊழல், பொய் வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, பல லட்சக்கணக்கான மக்களை இப்பேரணி இணைக்கிறது.
இன்று அதன் நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துடிப்பான நிர்வாகிகளுடன் உரையாற்றவுள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அந்தமானிலிருந்து தனிவிமானத்தில் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.
பிறகு ஹெலிகாப்டா் மூலம் புதுக்கோட்டைக்குச் செல்லும் அவா், திருச்சி சாலையில் உள்ள பாலன் நகா் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறவுள்ள பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.