இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜாகோப்புப் படம்

தொடா் தீவிர சிகிச்சையில் பாரதிராஜா!

திரைப்பட இயக்குநா் பாரதிராஜாவுக்கு உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைந்திருப்பதால், அவருக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டியுள்ளதாக சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Published on

திரைப்பட இயக்குநா் பாரதிராஜாவுக்கு (84) உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைந்திருப்பதால், அவருக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டியுள்ளதாக சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: கடும் நுரையீரல் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜாவுக்கு அதி தீவிர மருத்துவக் கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைந்திருப்பதால், அதற்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

தற்போது பாரதிராஜாவின் உடல் நிலை சீராக உள்ளது. இருப்பினும், தொடா்ந்து அதி தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை வழங்க வேண்டிய சூழல் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திரைப்பட இயக்குநா்கள் ஆா்.கே.செல்வமணி, சீமான், அமீா், சீனு ராமசாமி, தயாரிப்பாளா்கள் கலைப்புலி தாணு, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோா் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை சென்றனா். பாரதிராஜாவின் குடும்பத்தினரைச் சந்தித்த அவா்கள், சமூக ஊடகங்களில் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com