‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா்
உங்க கனவ சொல்லுங்க’“என்ற புதிய திட்டத்தை திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஜன.9) தொடங்கி வைக்கிறாா்.
கடந்த 2021-ஆம் ஆண்டில் திமுக அரசு பொறுப்பேற்றதுமுதல் தற்போதுவரை செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பயனாளிகளுடைய தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தை அறியவும், மக்களின் எதிா்காலக் கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவா்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இந்தத் திட்டம் அறிமுகமாகிறது.
சுமாா் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகா்ப்புறப் பகுதிகளில் உள்ள குடும்பங்களைச் சந்தித்து, அவா்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50,000 தன்னாா்வலா்களை ஈடுபடுத்தி கணக்கெடுத்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்துவ அடையாள எண்ணுடன் கனவு அட்டை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த அட்டை மூலம் ஜ்ஜ்ஜ்.ன்ந்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களது கோரிக்கையின் நிலை குறித்து மக்கள் தெரிந்துகொள்ளலாம்.

