சொந்த ஊர் செல்வோர் கவனத்துக்கு... இன்றிரவு சிறப்பு ரயில் இயக்கம்!

சென்னையிலிருந்து தென்காசிக்கு இன்றிரவு சிறப்பு ரயில் இயக்கப்படுவது தொடர்பாக...
சிறப்பு ரயில்கள்
சிறப்பு ரயில்படம்: கோப்பிலிருந்து...
Updated on
1 min read

பொங்கல் தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்காக சென்னையிலிருந்து தென்காசிக்கு இன்றிரவு (ஜன. 13) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை எழும்பூர் - தென்காசி இடையே இயக்கப்படும் இந்த ரயிலானது(06072) எழும்பூரில் இருந்து இன்று இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு தென்காசிக்குச் சென்றடையும்.

8 படுக்கை வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள்(முன்பதிவில்லா), 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என மொத்தம் 18 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம் , அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், கூடல்நகர், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் வழியாக தென்காசியைச் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

A special train is being operated from Chennai to Tenkasi tonight.

சிறப்பு ரயில்கள்
சென்னை சங்கமம் - 2026 : முதல்வர் ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com