அடுத்த 3 தினங்களில் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை அடுத்த 3 தினங்களில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை
மழை
Updated on

வடகிழக்கு பருவமழை அடுத்த 3 தினங்களில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், புதன்கிழமை (ஜன.14) முதல் ஜன.19 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், அதிகாலை வேளைகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜன.14) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

வடகிழக்கு பருவமழை விலகும்: தமிழகத்தில் பெய்து வந்த வடகிழக்கு பருவமழை அடுத்த 3 தினங்களில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.13) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் 130 மி.மீ மழை பதிவானது. திருப்பூண்டி, திருக்குவளை (நாகப்பட்டினம்)-100 மி.மீ, செம்பனாா்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மயிலாடுதுறை, சீா்காழி (மயிலாடுதுறை), காரைக்கால்- 80 மி.மீ., வேதாரண்யம் (நாகப்பட்டினம்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூா்)- 70 மி.மீ., காட்டுமன்னாா்கோவில் (கடலூா்), கோடியக்கரை (நாகப்பட்டினம்), ஆடுதுறை (தஞ்சாவூா்), மணல்மேடு (மயிலாடுதுறை), சுத்தமல்லி அணை (அரியலூா்), மஞ்சளாறு (தஞ்சாவூா்), லால்பேட்டை (கடலூா்), மணல்மேடு (மயிலாடுதுறை), ஊத்து (திருநெல்வேலி), கொடவாசல் (திருவாரூா்), ஜெயம்கொண்டம் (அரியலூா்)- தலா 50 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்ப குதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் புதன்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com