பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!
Updated on
1 min read

பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் நாளையும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை சென்னை ஆலந்தூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜன. 8 ஆம் தேதி தொடங்கிவைத்தார்.

இந்த பரிசுத் தொகுப்புகள் நியாய விலைக் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக அந்தந்த நியாய விலைக் கடை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று குறிப்பிட்ட தேதியிட்டு டோக்கன் விநியோகித்தனர்.

அந்த டோக்கன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 3,000 பரிசுத் தொகை மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

டோக்கன் பெறாதவர்கள் அனைவரும் இன்று நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மக்கள் சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு வசதியாக நாளையும் நியாய விலைக் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறாதவர்கள் நாளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Pongal gift package will be distributed tomorrow as well!

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!
பிரதமர் மோடி வருகை சென்னைக்கு மாற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com