gold
தங்கம் விலை (கோப்புப்படம்)din

தங்கம், வெள்ளி விலைகள் வரலாறு காணாத உயர்வு!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக...
Published on

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று(ஜன. 20) சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சென்ற வாரத் தொடக்கம் முதலே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 240-க்கு விற்பனையானது.

தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,610-க்கும் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 12 உயர்ந்து ரூ.330-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 12,000 உயர்ந்து ரூ.3.30 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

In Chennai, the prices of gold and silver have risen to unprecedented levels, reaching a new all-time high.

gold
சபரிமலை கோயில் நடை அடைப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com