பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்! முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் குடியரசு நாள் வாழ்த்து...
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு குடியரசு நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் குடியரசு நாள் விழா இன்று மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசின் விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, தேசியக் கொடியேற்றி வைத்தார்.

இதனிடையே, தமிழ்நாடு முதல்வர் வெளியிட்டிருக்கும் குடியரசு நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

”பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம். பரந்துபட்ட இந்தியா! எண்ணற்ற மொழிகள், இனங்கள், பண்பாடுகள். நம்பிக்கைகள் தழைக்கும் நாடு.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது நூற்றாண்டுகள் கடந்த நாட்டுணர்வுப் பண்பு.

நாம் அனைவரும் சுயமரியாதை உணர்வுடன், நம்பிக்கையுடன், சுதந்திரத்துடன் வாழும் போது ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருசேர உயர்கிறது.

இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை. அவை ஒன்றை ஒன்று மதித்து வளப்படுத்துகின்றன.

நமது பலம் என்பது ஒற்றைத்தன்மை அல்ல, பன்முகத்தன்மையே அந்தப் பன்முகத்தன்மை காக்கப்படுவதே இந்தியாவைக் காக்கும்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் போற்றுவோம்! பெருமிதத்துடன் என் மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Let's celebrate a diverse India! Chief Minister Stalin

முதல்வர் மு.க.ஸ்டாலின்
குடியரசு நாள்: மோடி, ராகுல் வாழ்த்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com