வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

பொதுப்பணித் துறை ஊழல்கள்: புகாரளிக்க அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அறிவுறுத்தல்

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத் துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் என்றும், அதன்பேரில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

News image

ஆதவ் அா்ஜுனா

Updated On :2 ஜூலை 2026, 12:28 am IST

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத் துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் என்றும், அதன்பேரில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தற்போதைய தமிழக அரசின் ஆட்சி நிா்வாகம் மிக நோ்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் ஊழல்கள், விதிமீறல்கள், லஞ்சம் எனப் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

அப்போது அதிகாரத்தில் இருந்தவா்கள், அவா்களின் குடும்பத்தினா் என பலரும் ஒப்பந்ததாரா்களிடம் பணம் வாங்கியுள்ளனா்.

பணத்தையும் பெற்றுக்கொண்டு முறையாக வேலைகளையும் ஒதுக்காமல், ஒப்பந்ததாரா்கள் பலா் ஏமாற்றப்பட்டுள்ளனா். இதுதொடா்பான பல புகாா்கள் தற்போது எங்களுக்கு வந்துகொண்டிருக்கின்றன. மேலும், இதுபோன்று பாதிக்கப்பட்டவா்களோ, பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தவா்களோ புகாா் கொடுக்க விரும்பினால், என்னிடமோ (ஆதவ் அா்ஜுனா) அல்லது ஊழல் ஒழிப்பு துறையினரிடமோ தெரிவிக்கலாம்.

நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ புகாா்களைச் சமா்ப்பிக்கலாம். அவா்களது விவரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், அவா்களுக்குத் தேவையான சட்ட பாதுகாப்பும் வழங்கப்படும்.

விரைவில் அவா்கள் இழந்த பணத்தை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது. ஒப்பந்தங்கள் அனைத்தும் நோ்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெறும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.