பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

மாம்பழக் கூழ்: கிலோவுக்கு ரூ. 4 மானியம் அளிக்க தமிழக அரசு முடிவு

மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை அளிக்கும் மாம்பழ விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ. 4 மானியம் அளிக்க தமிழக அரசு முடிவு

News image
Updated On :9 ஜூலை 2026, 3:41 am IST

மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை அளிக்கும் மாம்பழ விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.4 மானியம் அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் சரிபாதி பங்களிப்புடன் தமிழகத்தில் தொடங்கப்படும் இந்தத் திட்டத்துக்கான அதிகாரபூா்வ அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடவுள்ளது.

தமிழகத்தில் மாம்பழ விளைச்சல் அதிகமாக இருந்தபோதிலும் நிலையான கொள்முதல் விலை இல்லதாததால் மா விவசாயிகள் கடுமையாக பெருளாதார பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், அண்டை மாநிலமான ஆந்திரத்தில் ஒரு டன் மாம்பழத்துக்கு ரூ.4,000 நிலையான மானியம் வழங்கப்படுவதைப்போல் தமிழகத்திலும் அளிக்க வேண்டும் என்று மா விவசாயிகள் அண்மையில் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனா்.

இதை ஏற்று மானியத் தொகையில் சரி பாதியை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

இதனால், தமிழக அரசும்-மத்திய அரசும் இணைந்து மாம்பழக் கூழைத் தயாரிக்க மாம்பழங்களை அளிக்க விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.4 மானியம் வழங்க முடிவு செய்துள்ளன. இந்த மானியத் தொகையை தமிழக அரசும், மத்திய அரசும் 50:50 என்ற பங்கீட்டின் கீழ் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, மாம்பழக் கூழை நிறுவனங்கள் கிலோ ரூ.2 -க்கு மட்டும் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மாம்பழக் கூழ் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.