தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களிலும் புதுவையில் 2 இடங்களிலும் வெய்யில் சதமடித்தது.
தமிழகத்தில் இன்று(ஜூலை 15) பகல் நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 106.88 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை, மீனம்பாக்கம், திருத்தணியில் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சென்னை நுங்கம்பாக்கம், ஈரோட்டில் தலா 103 டிகிரி ஃபாரன்ஹீட், திருச்சியில் 102 டிகிரி ஃபாரன்ஹீட், தஞ்சை, கரூர் பரமத்தி, நாகையில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எல்-நினோ காரணமாக, கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை குறைந்ததும், வட மேற்கு திசை காற்று தமிழகத்துக்குள் நுழைவதாலும் அதிகபட்ச வெப்பம் பதிவாகியிருப்பதாக வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Summary
Temperatures hit the century mark at 10 locations in Tamil Nadu and two locations in Puducherry today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











