பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

இதுதான் ஆய்வு! ஆட்டுக்கறி குழம்பில் கறி எங்கே? மாணவர் விடுதியில் ஆட்சியர் கேள்வி!

இதுதான் உண்மையான ஆய்வு என்று சொல்லும் வகையில், ஆட்டுக்கறி குழம்பில் கறி எங்கே என மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு செய்து கேள்வி எழுப்பினார்.

News image

குழம்பு வகை - பிரதி படம் - File photo

Updated On :15 ஜூலை 2026, 4:13 pm IST

தஞ்சையில், சமூக நீதி மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், இன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்டுக் கறிகுழம்பில், கறி இல்லாததை சுட்டிக்காட்டி, விடுதி நிர்வாகிகளைக் கடிந்துகொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்காவில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவிந்தபுரத்தில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்தில் குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நெல் விதை, நுண்ணோட்டம் மற்றும் உயிர் உரங்களை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியையும் ஆய்வு செய்தார்.

அடுத்ததாக சமூக நீதி மாணவியர் விடுதிக்குச் சென்ற ஆட்சியர், மதிய உணவை சோதனை செய்தார். இது என்ன குழம்பு என கேட்டபோது மட்டன் குழம்பு என்று கூறப்பட்டது. ஆனால் குழம்பில் மட்டன் துண்டுகள் இல்லாமல் வெறும் கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு மட்டுமே இருந்ததை பார்து அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார்.

இது கத்திரிக்காய் குழம்பு என சுட்டிக்காட்டியதோடு, சரியான உணவை வழங்குமாறும் உத்தரவிட்டார். அத்துடன் விடுதி கழிப்பறையில் மணல் குவிந்து கிடந்ததையும் கண்டித்து உடனடியாக சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து ஆடுதுறை அரசு உயர்நிலை பள்ளியில் மதிய உணவை சாப்பிட்டுப் பார்த்து மாணவிகளிடம் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். கல்யாணபுரம், வேப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு தொடரும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் திருமலை, வட்டாட்சியர் சாந்தமீனா உடன் இருந்தனர்.

Summary

this is inspection Where is the mutton District Collector questions the hostel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.