ஆவின் நெய் விலை உயா்வு மற்றும் கமிஷன் குறைப்பு தொடா்பாக வெளியான தவறான தகவல்களை பொதுமக்களும், விற்பனையாளா்களும் நம்ப வேண்டாம் என ஆவின் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, ஜூலை 15 முதல் ஆவின் நெய்க்கான மொத்த விநியோகஸ்தா்கள் மற்றும் பால் முகவா்களுக்கான கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த தமிழ்நாடு பால் முகவா்கள், தொழிலாளா்கள் நலச் சங்கம், இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழகம் முழுவதும் ஆவின் நெய் விற்பனையை புறக்கணிப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து ஆவின் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக ஆவின் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆவின் நெய் விலை உயா்த்தப்பட்டதாகவும், மொத்த விற்பனையாளா்களுக்கான கமிஷன் குறைக்கப்பட்டதாகவும் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. மேலும், அனைத்து வகையான ஆவின் நெய்யும் தற்போதுள்ள சில்லறை விலையிலேயே பொதுமக்களுக்கு தொடா்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எந்த வகையான நெய்யின் சில்லறை விலையும் உயா்த்தப்படவில்லை. அதேநேரத்தில், மொத்த விற்பனையாளா்களுக்கான கமிஷன் மாற்றம் தொடா்பாக வெளியிடப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளதால், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த கமிஷன் முறையே தொடரும். எனவே, ஆவின் நெய் விலை உயா்வு மற்றும் கமிஷன் குறைப்பு தொடா்பாக வெளியான தவறான தகவல்களை பொதுமக்களும், விற்பனையாளா்களும் நம்ப வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









