பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

வேடிக்கை பார்க்க வந்தவரை அழைத்து, அலுவலகத்தை திறக்க வைத்த அமைச்சர்!

வேடிக்கை பார்க்க வந்தவரை அழைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறக்க வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் குறித்து...

News image

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைக்கும் மூதாட்டி. - படம்: தினமணி

Updated On :20 ஜூலை 2026, 5:47 pm IST

சேலம் மாவட்டம் சங்ககிரியில் அமைச்சரின் நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வந்தவரை அழைத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறக்க வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனின் செயல் காண்போரை நெழ்ச்சியடைய வைத்துள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சிக்குள்பட்ட குப்பனூர் பைபாஸ் பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 5.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழாவில், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் தலைமையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி புதிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

அதற்க்கு முன்னதாக, அரசு நிகழ்ச்சியை வேடிக்கை பார்ப்பதற்காக, நின்று கொண்டிருந்த மூதாட்டியை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கைப்பிடித்து, அழைத்து வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி, திறக்க வைத்த சம்பவம் காண்போரை நெழ்ச்சியடைய வைத்தது.

இதனைத் தொடர்ந்து, புதிய அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடம், "தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?" என்ற மு.க. ஸ்டாலின் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, அமைச்சர், "மக்களின் ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்மையான ஆட்சிதான் நடைபெற்று வருகிறது" என்று பதிலளித்தார்.

Summary

Transport Minister Vijay Tamilan Parthiban’s gesture of inviting a bystander who had come to watch the Minister's event in Sankagiri, Salem district to inaugurate the Panchayat Union office has deeply moved onlookers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.