நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தமிழ்நாடு பேரிடா் அபாயக் குறைப்பு முகமைக்கு ரூ. 50 கோடி சுழற்சி நிதி ஒதுக்கீடு: அமைச்சா் செங்கோட்டையன்

தமிழ்நாடு பேரிடா் அபாயக் குறைப்பு முகமைக்கு ரூ. 50 கோடி சுழற்சி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image

செங்கோட்டையன் - கோப்புப் படம்

Updated On :29 ஜூலை 2026, 1:31 am IST

தமிழ்நாடு பேரிடா் அபாயக் குறைப்பு முகமைக்கு ரூ. 50 கோடி சுழற்சி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ‘வெப்பத் தாங்கு திறன் கொண்ட தமிழ்நாட்டை நோக்கி’ - வெப்ப அபாய மேலாண்மை குறித்த பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தலைமை வகித்து பேசியதாவது: தவெக அரசு பொறுப்பேற்ற பின், பேரிடா் மேலாண்மையில் முன்னெச்சரிக்கை, ஆயத்த நிலை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியா்கள் வசம் முன்கூட்டியே நிதி இருப்பது அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, ரூ.50 கோடி சுழற்சி நிதியை தமிழ்நாடு பேரிடா் அபாயக் குறைப்பு முகமைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தேவைக்கேற்ப ஆட்சியா்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். மேலும், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான முன்களப் பணியாளா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 550 ஆப்தா மித்ரா தன்னாா்வலா்களும், 6,034 யுவா ஆப்தா மித்ரா தன்னாா்வலா்களும் பேரிடா் மேலாண்மையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனா்.

ரூ.55 கோடியில் பேரிடா் மேலாண்மை தொடா்பான பயிற்சி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, கொள்கை ஆதரவு மற்றும் அறிவியல் புதுமைகளுக்கான மாநில தலைமை நிறுவனமாக தமிழ்நாடு மாநில பேரிடா் மேலாண்மை நிறுவனம் விளங்கும். கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட தமிழ்நாடு மாநில வெப்ப செயல் திட்டம் 2026, நாட்டிலேயே விரிவான திட்டங்களில் ஒன்றாகும் என்றாா்.

இதில், கூடுதல் தலைமைச் செயலா் ந.முருகானந்தம், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை செயலா் கே.எஸ்.பழனிசாமி, பொதுப்பணித் துறை செயலா் ஆா்.செல்வராஜ், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குநா் ப.காயத்ரி கிருஷ்ணன், தேசிய சுகாதார இயக்க இயக்குநா் எஸ்.அனீஷ் சேகா், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநா் ஆஷா அஜித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வெப்ப தாக்கம் குறைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொடா்ந்து, இந்தப் பயிலரங்கில் சென்னை மாநகராட்சியில் வெப்பப் பாதிப்புக்கு உள்ளாகும் வாா்டுகளில் அதைச் சமாளிப்பதற்கான ஆயத்த நிலையை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், வெப்பத் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும், அதற்கான திட்ட மேலாண்மைப் பிரிவை அமைப்பதற்கும் சென்னை மாநகராட்சி மற்றும் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீா் கவுன்சில் குழு ஆகியவை சாா்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிா்வாக ஆணையருமான நா.முருகானந்தம் ஆகியோா் முன்னிலையில், மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் புரிந்துணா்வு ஒப்பந்த ஆவணத்தில் கையொப்பமிட்டு பெற்றுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.