'வீ த லீடர்ஸ்'அமைப்பின் பிரத்யேக செயலியை அறிமுகம் செய்துள்ள இது நம்ம இயக்கத்தின் தலைவர் கே. அண்ணாமலை, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதியில் மாற்றத்தை உருவாக்கும் பயணத்தில் நீங்களும் இணைந்திடுங்கள். சமூக மாற்றத்துக்கான தலைமைப் பயணத்தைத் தொடங்குங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
செயலியை பதிவிறக்கம் செய்து, எப்படிப் பயன்படுத்துவது என்பதை எளிமையாக விளக்கி காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
'வீ த லீடர்ஸ்'அமைப்பின் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வழிமுறைகள்
முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் 'We The Leader' என தட்டச்சு செய்து செயலியை பதிவிறக்கம் செய்யவும். ஏற்கெனவே வலைதளம் மூலம் இணைந்தவர்கள் 'உள்நுழை' பட்டன் வழியாகவும், புதிதாக இணைபவர்கள் 'இணைப்பு' பட்டனை வழியாகவும் இணையலாம். இந்த இரண்டு நிலைகளிலும் செல்போன் எண்ணை பதிவு செய்து கடவுச் சொல்லை உறுதிப்படுத்தியதும் சரிபார்க்கும் பட்டனை அழுத்தி இணையலாம். புதிதாக இணைபவர்கள் கூடுதலாக அடுத்து வரும் பக்கத்தில் தங்கள் பெயர், பிறந்த தேதி, மாநிலம் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி போன்ற சுய விவரங்களை அளித்து 'தொடர்ச்சி' பட்டனை அழுத்தி பதிவு செய்ய வேண்டும்.
அடுத்து உறுப்பினராக இணைந்ததும் முகப்பு பக்கம் திறக்கப்படும். அதில் அடிமட்டத் தலைவராக செயல்பட விருப்பமா?, தலைமைத்துவப் பயிற்சியில் பங்கேற்க விருப்பமா?, உள்ளாட்சித் தேர்தல் உள்பட பொதுத் தலைமைப் பொறுப்பை ஏற்க விருப்பமா?, முன்பு தேர்தலில் போட்டியிட்டதுண்டா? என 4 முக்கியமான கேள்விகள் கேட்கப்படும். இதற்கு ‘ஆம்' அல்லது ‘இல்லை' எனப் பதிலளிக்கலாம். பதிலளிக்க விருப்பம் இல்லையெனில் அதை நிராகரிக்கலாம். சர்வே முடிந்ததும் தலைமை சேவகர் அண்ணாமலை வரவேற்பு காணொளி திரையில் தோன்றி இணைப்பு உறுதி செய்யப்படும்.
அதன்பின் முகப்பு பக்கம் திறக்கும். இதில் இயக்கத்தின் நொக்கம் தலைவர்கள் எண்ணிக்கை, நிகழ்வுகளின் காணொளி மற்றும் புகைப்படங்கள் போன்ற தகவல்கள் இருக்கும்.
இந்த செயலியில் நிகழ்வுகள், ரீல்ஸ், சுயவிவரம் என மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. அதில் பகுதியில் நமது தலைவர்கள், அவர்கள் பகுதிகளில் நடத்தவிருக்கும் நிகழ்ச்சிகளின் விவரங்கள் பதியப்பட்டிருக்கும்.
'We The Leaders' செயலியை பதிவிறக்கம் செய்ய,
iPhone (App Store): https://apps.apple.com/in/app/we-the-leaders/id6785166150
Android (Google Play): https://play.google.com/store/apps/details?id=com.wetheleaders.wtlfapp
Summary
Let change begin with us... Exclusive app from the 'We Leaders' organization launched...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போலிகளைத் தடுக்க... அரட்டை செயலிக்கு இனி ஆதார் கட்டாயம்!

டாக்ஸி செயலியை அரசே உருவாக்க வலியுறுத்தி ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

ஆதார் செயலி மூலம் மின்னஞ்சலை இணைக்கலாம்! 6 மாதங்களுக்கு மட்டும் இலவசம்!

நீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா?
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager




