இந்தியா கூட்டணியில் திமுக இல்லாததால், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஜூன் 8 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திமுக அறிவித்துள்ளது.
இது குறித்து டி.கே.எஸ் இளங்கோவன் பேசியதாவது:
இந்தியா கூட்டணியில் திமுக இல்லை. எனவே, நாங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தவெகவுடன் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. அதன் அர்த்தம் காங்கிரஸ் திமுகவுடன் இல்லை என்பதுதான். திமுகவிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் தெரிவித்தது. அப்படியென்றால், இந்தியா கூட்டணியில் நம்மால் எப்படி தொடர முடியும்? அதனால்தான் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று கூறினோம்.
எங்கள் கூட்டணியில் வெற்றி பெற்ற ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களிடம் உள்ளனர். நாங்கள் அவர்களுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தைக் கொடுத்திருந்தோம். அதன்பிறகு, இந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் எங்கள் தலைவருக்கு நன்றி சொல்லக்கூட வரவில்லை.
28 தொகுதிகளில் எங்களுடைய தொண்டர்கள் அவர்களுக்காக வேலை செய்து இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியில் உள்ள எத்தனை கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றன என்று பார்ப்போம் எனத் தெரிவித்தார் டி.கே.எஸ். இளங்கோவன்.
Summary
DMK spokesperson T.K.S. Elangovan stated on Thursday that the party did not participate in the consultative meeting as it is not part of the INDIA alliance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம்

திமுக - அதிமுக எதிரிகள்; கூட்டணிக்கு வாய்ப்பில்லை! டி.கே.எஸ். இளங்கோவன்

அழிவு நிலைக்கு செல்லும் காங்கிரஸ்: டி.கே.எஸ். இளங்கோவன்
கட்சியில் இணைய அழுத்தம்தான் காரணமா? பாஜக மீது திமுக குற்றச்சாட்டு
விடியோக்கள்
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK




