மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள கட்சிகள் குறித்து...

News image

ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 5:50 pm IST

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்கவுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் இன்று (ஜூன் 7) தெரிவித்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளதாவது:

''ஜூன் 8, திங்கள் கிழமை நண்பகல் 12 மணிக்கு, தில்லி அரசியலமைப்பு மன்றத்தில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்த சிறப்புக் கூட்டத்தில் ஒருசில காரணங்களுக்காக சில கட்சிகள் பங்கேற்கவில்லை. எனினும் மோடி அரசாங்கத்திற்கு எதிரான தங்கள் கொள்கைகளிலும் நடவடிக்கைகளிலும் அவர்கள் அழுத்தமாக ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஜனநாயகத்தின் மீது நாள்தோறும் தாக்குதல் நடத்துவது, விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்துவது, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, ஓயாத பணவீக்கத்தின் மூலம் நடுத்தரக் குடும்ப பட்ஜெட்டை சீர்குலைப்பது, லட்சக்கணக்கான இளைஞர்கள், தேர்வர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைப்பது, முதலீட்டு சூழலை பலவீனமாக்குவது மற்றும் வெளியுறவுக் கொள்கையில் சமரசம் செய்துகொள்வது போன்றவற்றில் பாஜகவுக்கு எதிராக அவர்கள் நம்முடன் இணைந்து நிற்கின்றனர்.

இந்தியாவைப் போன்று இந்தியா கூட்டணியும் பன்முகத்தன்மையில் ஒன்றுபட்டு நிற்கிறது'' என ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.

Summary

INDIA bloc meeting to convene tomorrow with 23 parties Congress leader Jairam Ramesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.