புது தில்லியில் நேற்று ஒருபக்கம் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டமும், மறுபக்கம், ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஹிந்தி பேனர்களும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த பேனர்களை திமுக வைத்ததாக முரசொலியில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு கூட்டணியில் இருக்கும் கட்சிகளே இவ்வாறு அடித்துக் கொண்டால் இவர்கள் எவ்வாறு ஒற்றுமையாக மக்களுக்காகப் போராடுவார்கள் என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்ததால், இந்த பேனர்களை இந்தியா கூட்டணிக்கு எதிரானவர்கள்தான் வைத்திருப்பார்களோ என்ற சந்தேகங்கள் எழுந்தன. ஆனால், இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய திமுக வைத்திருக்கும் என்பது போன்ற தோற்றம் ஏற்படவில்லை.
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் கூறிய வாசகங்கள் அடங்கிய பேனர்கள் அதுவும் ஹிந்தியில் புகைப்படங்களுடன் வைக்கப்பட்டிருந்ததால் நிச்சயம் பலருக்கும் அதனை யார் வைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இருந்தது.
ஆனால், இன்று திமுகவின் நாளிதழான முரசொலியில், இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தது திமுக என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தை தி.மு.க. புறக்கணித்த நிலையில், டெல்லியில், ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து, தி.மு.க. சார்பில், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன என்று பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தியில், புதுடெல்லியில், இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.
புதுடெல்லியில் நடை பெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்தை தி.மு.க. புறக்கணிக்கும் என்று ஏற்கனவே தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அந்த அறிவிப்பில், டெல்லியில்நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் அக்கட்சித் தலைவர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக் காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப் பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.
இக்கூட்டத்தில் பங்கேற்காத அதேநேரத்தில் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில்,திராவிட முன்னேற்றக் கழகம்என்றைக்கும் குரல் கொடுக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. இதனிடையே, டெல்லியின் பல்வேறு பகுதிகளில், ராகுல்காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் விமர்சனம் செய்து, தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, காங்கிரஸ் நம்மைச் சார்ந்து வளர்ந்து வந்தது என்றும், இன்று அவர்கள் நமது முதுகில்
குத்திவிட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களுக்குள்ளேயே சண்டையிடுபவர்கள், எப்படி ஒன்றிணைந்து போராடுவார்கள்? என்றும் பேனரில் எழுதப்பட்டுள்ளது.
மேலும், காங்கிரஸ் கட்சியை விமர்சித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்களும், சரத்பவார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய பேச்சுக்களும், புதுடெல்லியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட பேனர்களில் இடம்பெற்றுள்ளன என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 8 - நேரலை!

தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்?
தில்லியில் இன்று ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்! 23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்!!

சொல்லப் போனால்... நம்பிக்கையில்லா கூட்டணி! என்ன செய்யப் போகிறார்கள்?
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



