தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைப் பாதுகாக்க முதல்வர் விஜய், என்ன படை அமைக்கப் போகிறார்? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து விடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காவல்துறை, மணிகண்டன் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில்,
"சேலம் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த தவெகவின் ஒன்றிய நிர்வாகியான மணிகண்டன் என்பவர், கடன் வாங்கித் தருவதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி தனது நண்பர்களின் இச்சைக்கும் பலியாக்கியதாக வெளியாகியுள்ள செய்தி தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
பெண்களை இப்படி வெறும் சதைப் பிண்டங்களாக மட்டுமே பாவிக்கும் மனித மிருகங்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கி பாதுகாத்துக் கொண்டிருக்கும் முதல்வர் விஜய், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?
வெளியில் உள்ள குற்றவாளிகளிடம் இருந்து பெண்களைக் காக்க சிங்கப்பெண் சிறப்புப் படை அமைத்துள்ளதாக விளம்பரம் தேடும் முதல்வர், தனது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை பாதுகாக்க என்ன படை அமைக்கப் போகிறார்?
'மாற்று அரசியல்' என்று முழங்கிய தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பாலியல் குற்றங்களும், பெரும்பாலான குற்றங்களின் பின்னணியில் தவெகவினரின் முகங்களும் தினசரி செய்தித்தாள்களை நிறைத்து வருவதைப் பார்க்கையில், கடந்த தீயசக்தியின் நீட்சி தான் தற்போதைய துரோக சக்தி என்பது உறுதியாகிறது.
'தவெகக்காரன்' என்பது குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாகவே மாறி வருவது கண்டிக்கத்தக்கது மட்டுமன்றி, ஆபத்தானதும்கூட. இப்படிப்பட்டவர்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், வரும் காலத்தில் தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்திக்க நேரிடும்" என்று பதிவிட்டுள்ளார்.
பà¯à®£à¯à®à®³à¯ வà¯à®à¯à®à¯à®¯à®¾à®à¯à®®à¯ à®à®¾à®®à¯à®à®°à¯à®à®³à®¿à®©à¯ à®à¯à®à®¾à®°à®®à®¾à®© தவà¯à®!
— Nainar Nagenthran (@NainarBJP) June 13, 2026
à®à¯à®²à®®à¯ நà¯à®¯à¯à®à¯à®à®¾à®°à®ªà¯à®ªà®à¯à®à®¿à®¯à¯à®à¯ à®à¯à®°à¯à®¨à¯à®¤ தவà¯à®à®µà®¿à®©à¯ à®à®©à¯à®±à®¿à®¯ நிரà¯à®µà®¾à®à®¿à®¯à®¾à®© மணிà®à®£à¯à®à®©à¯ à®à®©à¯à®ªà®µà®°à¯, à®à®à®©à¯ வாà®à¯à®à®¿à®¤à¯ தரà¯à®µà®¤à®¾à®à®à¯ à®à¯à®±à®¿ 50-à®à¯à®à¯à®®à¯ à®®à¯à®±à¯à®ªà®à¯à® பà¯à®£à¯à®à®³à¯ பாலியல௠ரà¯à®¤à®¿à®¯à®¾à® தà¯à®©à¯à®ªà¯à®±à¯à®¤à¯à®¤à®¿à®¯à®¤à¯à®à¯ à®à®µà®°à¯à®à®³à¯ à®à®ªà®¾à®à®®à®¾à® வà¯à®à®¿à®¯à¯ à®à®à¯à®¤à¯à®¤à¯ மிரà®à¯à®à®¿ தனத௠நணà¯à®ªà®°à¯à®à®³à®¿à®©à¯â¦ pic.twitter.com/K9Mz1LPNtU
Summary
What kind of force is needed to protect women from TVK functionaries? Nainar Nagendran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 2,500 உரிமைத் தொகை எப்போது? யாரை ஏமாற்ற முயற்சிக்கிறது தவெக அரசு? நயினார் நாகேந்திரன்
பெண்களைத் துரத்தும் தவெக நிர்வாகிகள்! சிங்கப்பெண் பாதுகாப்புப் படை தூங்குகிறதா? நயினார் நாகேந்திரன்
ஒரே அணியில் திமுக, தவெக: திருமாவளவன் கருத்துக்கு பாஜக பதில்
ஆரம்பமாகிறதா தூயசக்தியின் ஊழல் வேட்டை? - பாஜக குற்றச்சாட்டு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


