ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

செய்யறிவு, உங்கள் வேலையைப் பறிக்கும் என்று நம்பமாட்டேன்! அண்ணாமலை பேச்சு

கோவை தனியார் கல்லூரி நிகழ்வில் செய்யறிவு தொழில்நுட்பம் குறித்து அண்ணாமலை பேசியது பற்றி....

I do not believe that artificial intelligence will take away your jobs: Annamalai

கோவை தனியார் கல்லூரி நிகழ்வில் அண்ணாமலை... - X

Published On :

செய்யறிவு, நம்மையோ, நம்முடைய வேலையையோ அழிக்க முடியாது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்,

"2025 என்பது செய்யறிவு தொழில்நுட்பக் காலம். 1982 இல் கணினி எப்படி நம்முடைய வாழ்க்கையை மாற்றியதோ அதுபோல தற்போது செய்யறிவு(ஏஐ) காலம். இன்று அனைவரின் கையிலும் மொபைல்போன் இருக்கிறது. ஸ்மார்ட்போன் என்பது ஒரு நவீன கம்ப்யூட்டர். கடந்த ஒரு 40 ஆண்டுகள் எவ்வளவு மாறியிருக்கிறது என்று பாருங்கள். இன்று தொழில்நுட்ப யுகத்தில் நுழையும்போது இந்த செய்யறிவு கண்டிப்பாக மனித நேயத்துடன் வாழும் விதத்தைப் பாதிக்கும். அது உங்களுக்கு பலவிதமான தொந்தரவுகளை ஏற்படுத்தும். அதில் உங்களுக்கு வாழத் தெரிய வேண்டும். செய்யறிவு எந்த நேரத்திலும்கூட உங்களுடைய வேலையைப் பறித்துவிடும் என்று நான் நம்ப மாட்டேன்.

செய்யறிவு நிறுவன உரிமையாளரான ஜென்சன் ஹுவாங் பேசும்போது, இரு தரப்பு பட்டதாரிகள் இருக்கிறார்கள். ஒன்று செய்யறிவினால் என்ன நன்மைகள் என்று தெரிந்த பட்டதாரிகள். அவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். மற்றொரு தரப்பினர் செய்யறிவின் நன்மை தெரியாதவர்கள் பிழைத்துக்கொள்வது கடினம் என்று கூறினார்.

ஆனால் செய்யறிவு, நம்மையோ, நம்முடைய வேலையையோ அழிக்க முடியாது. செய்யறிவு தெரியாத காரணத்தால் ஒரு மாணவருக்கு பிரச்னை வேண்டுமானால் வரலாம் என்று கூறுகிறார்கள். அதனால் நீங்கள் பட்டதாரிகளாக ஆணாலும்கூட தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். அதுபோல பெரிய பதவிகள் வரும், போகும். நாம் கற்றுக்கொண்டவை மட்டுமே நம் கூடவே இருக்கும். பதவி என்பது சட்டை, காலணி போன்றது, நிரந்தரமற்றது" என்று பேசினார்.

Summary

I do not believe that artificial intelligence will take away your jobs: Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.