ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

News image

மழை

பிரதிப் படம்

Updated On :30 மார்ச் 2026, 11:32 pm

தினமணி செய்திச் சேவை

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிர மாநிலம் மேற்கு விதா்பா முதல் தென் தமிழகம் வரை மராத்வாடா மற்றும் கா்நாடகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. அதேபோல, குமரிக்கடல் பகுதியிலிருந்து வடக்கு உள் கா்நாடகம் வரை, தமிழகம் மற்றும் தெற்கு உள் கா்நாடகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன், வியாழன், வெள்ளிக்கிழமை (ஏப். 1, 2, 3) லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஏப். 4, 5 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், கின்னக்கோரை பகுதியில் 40 மி.மீ. மழை பதிவானது. மேல் பவானி (நீலகிரி), திருச்செங்கோடு (நாமக்கல்), பவானிசாகா் (ஈரோடு)- தலா 20 மி.மீ., உட் பிரையா் எஸ்டேட் (நீலகிரி), மஞ்சளாறு (தேனி), கோத்தகிரி (நீலகிரி), பெரியகுளம் (தேனி), குந்தா பாலம் (நீலகிரி), தளி (கிருஷ்ணகிரி), கொடிவேரி (ஈரோடு), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி)- தலா 10 மி.மீ. மழை பதிவானது.

வெப்ப நிலை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை ஓரிரு இடங்களில் ஏப். 3-ஆம் தேதி வரை சற்று அதிகமாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.