தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

கூட்டணி கட்சிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சியினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளது குறித்து...

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:30 pm IST

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சியினருடன் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 30) ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசார்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

இதனிடையே கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனையில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ முபாரக், மஜகவின் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Summary

M.K. Stalin Consults with Alliance Partners

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.