ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இளம் வயது அமைச்சரானார் கீர்த்தனா!

அடுத்த 50 ஆண்டுகளுக்கு தவெக அரசு நிலைத்திருக்கும் - அமைச்சர் எஸ். கீர்த்தனா!

TVK leader S Keerthana takes oath as the Tamil Nadu Cabinet Minister during the swearing-in ceremony, at Jawaharlal Nehru Stadium, in Chennai, Sunday, May 10, 2026. Newly-elected state Chief Minister and TVK chief Vijay and Congress MP and Lok Sabha LoP Rahul Gandhi are also seen. (PTI Photo/R Senthilkumar)(PTI05_10_2026_000413A)

அமைச்சர் எஸ். கீர்த்தனா! - PTI

Published On :10 மே 2026, 5:50 pm IST

சென்னை : விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இளம் வயது அமைச்சரானார் கீர்த்தனா.

தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று(மே 10) காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஒரு மருத்துவர், ஒரு பல் மருத்துவர், ஒரு முன்னாள் இந்திய வருவாய்த்துறை அதிகாரி உள்பட வெவ்வேறு பின்புலத்தைச் சார்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றி பெற்ற 29 வயதான எஸ். கீர்த்தனா இன்று(மே 10) அமைச்சராகப் பதவியேற்றார். இதன்மூலம், அவர் தவெக அரசில் இளம் வயது அமைச்சரானார்.

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற முதல் பெண் எம்எல்ஏ இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளா்கள் போட்டியிட்டதில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிட்ட கீா்த்தனா 68,709 வாக்குகள் பெற்று 11, 670 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி 51,078 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டாா்.

அமைச்சராகப் பதவியேற்ற எஸ். கீர்த்தனா

அமைச்சராகப் பதவியேற்ற எஸ். கீர்த்தனா - யூடியூப் நேரலையிலிருந்து...

கீர்த்தனா சம்பத் ஹிந்தியில் சரளமாகப் பேசும் காணொலிகள் சமூக வலைதளங்களில் பிரபலம். தவெக ஆட்சியமைக்கும் முன் பிரசாரங்களில் இளையோர் சக்தியை அணி திரட்டுவதில் கெட்டிக்காரர் என்ற பெருமையும் கீர்த்தனாவுக்கு உண்டு. இந்நிலையில், விஜய்க்கு இளையோர் ரசிகர்கள் ஏராளம் என்பதைக் கருத்திற்கொண்டு, கீர்த்தனாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சர் பதவியேற்ற பின் செய்தியாளர்களுடன் பேசிய கீர்த்தனா, அடுத்த 50 ஆண்டுகளுக்கு தவெக அரசு நிலைத்திருக்கும் என்று தெரிவித்து புன்னகை பூத்தார்.

Summary

S Keerthana, 29, became one of the youngest ministers in Tamil Nadu and the only woman in the first cabinet of Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.