முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

ஸ்மார்ட் ஏசி வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்ன?

ஸ்மார்ட் ஏசி வாங்கும்போது கவனிக்க வேண்டியது விவரங்கள் பற்றி..

News image

ஸ்மார்ட் ஏசி - File photo

Updated On :22 மே 2026, 10:30 am IST

வீட்டுக்கு ஏசி வாங்கும்போது பலரும், மின் கட்டணம் எகிறுமே என்றுதான் கவலைப்படுவார்கள். ஆனால், இப்போது குறைவான மின்சாரத்தில் இயங்கும் குளிர்சாதனங்கள் வந்துவிட்டன. அதுவும் ஸ்மார்ட் ஏசிகள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன.

முன்பெல்லாம் எத்தனை டன் ஏசி என்று மட்டும் பார்த்து வாங்கிக் கொள்வார்கள். ஆனால் இப்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஏசியை வாங்கவே விரும்புகிறார்கள்.

அதிலும், ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப, பயன்படும் விதத்துக்கு ஏற்ப ஏசிகள் வகை வகையாக விற்பனைக்கு வந்து கொண்டேயிருக்கின்றன.

செயலியில் கட்டுப்படுத்தும் ஏசி - வீட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் ஏசியை உங்கள் செல்போன் அல்லது டேலெட் மூலமாகவே மாற்ற முடியும். நீங்கள் வீட்டில் இல்லாத போதும்.

மின்சாரப் பயன்பாடு-ஸ்மார்ட் ஷெட்யூல் மற்றும் மோடுகளை ஷெட்யூல் செய்வதால் மின்சாரப் பயன்பாடு குறையும்.

குரலில் கட்டளையிட்டால் செயல்படும் - அலெக்ஸா கூகுள் உதவியாளர் போன்றவற்றில் இயங்கும் ஏசிகள் அதிகம் விரும்பப்படுகிறது.

வெப்பநிலை - ஏசியில் இருக்கும் குளிர் அளவில் இல்லாமல், அந்த அறைக்குத் தேவையான குளிர்நிலையை சரியாக வைக்கும் வசதி.

எவ்வளவு பயன்படுத்தியிருக்கிறோம் என தரவு - சில நவீன மாடல் ஏசிகள் வந்துவிட்டன். அவை இதுவரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தியிருக்கிறது என்பதை செல்போன் செயலி மூலம் கொடுத்துவிடுமாம்.

வைஃபையில் இயங்கும் ஏசி, இன்டர்நெட்டில் இயங்கும் ஏறி, பல புது வித பயன்பாடுகளைக் கொண்ட ஏசிகள் தற்போது வந்துவிட்டன. எனவே, புதிய ஏசிகளை வாங்கும்போது இவற்றை கவனத்தில் கொள்வது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.