லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் மறைவு! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இரங்கல்!

பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் மறைவுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்...

udhayanidhi stalin

பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி - கோப்புப் படம் | Instagram

Published On :23 மே 2026, 6:49 pm IST

பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் நா.மா. முத்துக்கூத்தனின் மகனும், பொம்மலாட்டக் கலைஞருமான மு. கலைவாணன் சென்னையில், கடந்த வெள்ளிக்கிழமை (மே 22) இரவு காலமானார்.

கலைமாமணி விருது பெற்ற மு. கலைவாணன், 6000-க்கும் அதிகமான இடங்களில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பியவராக அறியப்படுகிறார். அவரது மறைவுக்குப் பல்வேறு முக்கிய தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மு. கலைவாணனின் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

“பொம்மலாட்டக் கலை மூலம் இளையத் தலைமுறையினரிடையே முற்போக்கு கருத்துக்களைப் பரப்பிய பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் அவர்களுடைய மறைவுச் செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.

கலைவாணன் அவர்களது கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் நமது திராவிட மாடல் அரசு அவருக்கு கலைமாமணி விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது.

அவரது மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பெரியாரிய இயக்கத்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Summary

Udhayanidhi Stalin has expressed his condolences on the passing of puppetry artist M. Kalaivanan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.