இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

தொண்டர்களைக் குழப்பும் திருமா: விசிகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விலகல் !

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு கட்சியிலிருந்து விலகினார்.

News image

விசிக தலைவர் தொல். திருமாவளவனுடன் பனையூர் பாபு - X

Updated On :24 மே 2026, 6:17 pm IST

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு கட்சியிலிருந்து விலகினார்.

Summary

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவானது. ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையைப் பெறாத நிலையில் திமுக கூட்டணியில் 5 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தவெக கூட்டணியில் இணைந்தது.

பின்னர், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயுஎம்எல் என திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் ஆதரவைப் பெற்று விஜய் முதல்வரானார்.

இந்த நிலையில் ஆதரவளித்த கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவதாகக் கூறியிருந்த விஜய் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் பங்களிப்பை உறுதிசெய்தார்.

இந்த நிலையில் விசிக தலைவரான தொல். திருமாவளவனின் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எதிர்த்து விசிக ஊடகப்பிரிவு முதன்மை செயலாளரும், செய்யாறு தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான பனையூர் பாபு அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், "விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்திற்குத்தான் செல்ல வேண்டும், சட்டமன்றத்திற்கு வரக் கூடாது; அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் பேசிய அரசியலையும், கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர்கள்’ என்று சூளுரைத்த அவர், இன்று அவர்களுடனே கைகோர்க்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாகும்.

ஆட்சி அதிகாரங்கள் வரும், போகும்; அது நிலையற்றது. ஆனால், அய்யா பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் நமக்கு வகுத்துத் தந்த கொள்கைகளே என்றென்றும் வாழும் நிலையான ஆயுதங்கள். அரசியல் தளத்தில், "மக்கள் சித்தாந்தங்களை விடக் கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படுவது ஆபத்தானது" என்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால் இன்று அந்த அபாயகரமான திசையில்தான் கொண்டிருக்கிறோமோ என அஞ்சுகிறேன்.

பயணித்துக்கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது என எனது மனசாட்சி உணர்த்துகிறது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன் என்ற எனது முடிவைக் கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Panaiyur Babu, a former MLA of the Viduthalai Chiruthaigal Katchi, has quit the party

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.