பிரதமரைச் சந்திக்க தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!இபிஎஸ் - எஸ்.பி. வேலுமணி அணி இணைவதாகத் தகவல்!மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! அலறும் வாகன ஓட்டிகள்..!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 குறைந்தது!
/

மேக்கேதாட்டு அணை: ஒரு செங்கலைக்கூட வைக்க விடமாட்டோம்! அமைச்சர் விஸ்வநாதன்

மேக்கேதாட்டு விவகாரம் குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

News image

கோப்புப் படம் - IANS

Updated On :27 மே 2026, 11:20 am IST

கர்நாடக அரசு, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு ஒரு செங்கலைக்கூட வைக்க விடமாட்டோம் என உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.

மதுரையில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்(காங்கிரஸ்) செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு ஒரு செங்கல்லைக்கூட எடுத்துவைக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு இதுதான், ஒரு செங்கலைக்கூட வைக்க விடமாட்டோம். எங்களுடைய முதல்வரின் நிலைப்பாடு என்னவோ அதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. 5 ஆண்டுகள் இந்த ஆட்சி நிலைத்து நிற்கும். முதல்வரின் கரத்தை வலுப்படுத்துவதற்கு, இந்த ஆட்சியை 5 ஆண்டுகள் கொண்டு செல்வதற்கு, காங்கிரஸ் பேரியக்கம் உறுதுணையாக இரும்புக்கோட்டையாக அவர் பின்னால் இருப்போம்" என்றார்.

மேலும், " முதல்வரே பல்கலைக்கழக வேந்தர் என்பது முந்தைய அரசின் நிலைப்பாடு. முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு கிடையாது. வேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் முடிவு எடுப்பார்" என்று கூறினார்.

Summary

Mekedatu Dam: We will not allow even a single brick to be laid: Minister Viswanathan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.