பணமதிப்பிழக்கம் நடந்து 10 ஆண்டுகள்! எதிர்பார்த்ததும் எதிர்பார்க்காததும்!
பணமதிப்பிழக்கம் நடந்து 10 ஆண்டுகள் ஆனநிலையில் எதிர்பார்த்ததும் எதிர்பார்க்காததும் பற்றி..

ரூபாய் தாள்கள் - கோப்பிலிருந்து
சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு, நவம்பர் 8ஆம் தேதி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 தாள்கள் பணமதிப்பிழக்கம் செய்யப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளம்.
அந்த நாள்களில் நேரிட்ட பல துயரங்களையும் கண்ணீர் கதைகளையும் இன்னமும் மக்களால் மறக்கவியலாமல் பேசிக்கொண்டும் நினைவுகளில் அசைபோட்டுக் கொண்டும்தான் நாள்களைக் கடக்கிறார்கள்.
அதன்பிறகு, ரூ.2000 நோட்டு வெளியிடப்பட்டு, அதுவும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு இன்று புழக்கத்திலிருந்து ஒட்டுமொத்தமாக நீங்கிவிட்டது.
கள்ள நோட்டு அதிகரிப்பு, கருப்புப் பணம் என பல்வேறு காரணங்களைக் கூறி மத்திய அரசு அறிமுகப்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது என்னவோ கையில் ஒரு சில ரூபாய் தாள்களை வைத்துக் கொண்டு உணவுக்கும் மருந்துக்கும் அலையாய் அலைந்தவர்கள்தான்.
கருப்புப் பணத்தை ஒழிக்க என்ற பெயரில் செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் அனைத்து ரூபாய் தாள்களும் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டன. எப்படி கருப்புப் பணம் வெள்ளையாக மாறியது என்பதற்கான பதில்கள் இல்லை.
புதிதாக ரூ.500 மற்றும் ரூ.200 புழக்கத்தில் விடப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போதைய காலத்தை விட இப்போது புழக்கத்தில் இருக்கும் பணம் குறைந்துவிட்டதா? என்று கேட்டால் அதுவும் இல்லை.
பணமதிப்பிழப்பு செய்தபோது ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்கள், ஒட்டுமொத்த பணப்புழக்கத்தில் 86 சதவிகிதம்.
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டில் புழக்கத்தில் இருந்த ஒட்டுமொத்த ரூபாய் தாள்கள் மதிப்பு ரூ.17.97 லட்சம் கோடி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 2017 ஜனவரியில் இது 7.8 லட்சம் கோடியாகக் குறைந்தது.
மெல்ல பணப்புழக்கம் அதிகரித்து 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி மொத்த பணப்புழக்கம் ரூ.42.55 லட்சம் கோடி. இது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முந்தையதைவிடவும் 136 சதவிகிதம் உயர்வு
பணப்புழக்கத்துக்கு ஈடாக 2025 - 26ல் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் நடந்த தொகை ரூ.3,251.04 லட்சம் கோடி.
நடப்பு நிதியாண்டில் 1,51,611 லட்சம் பணப்பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.30.31 லட்சம் கோடி.
எனவே, பணமதிப்பிழப்புக்குப் பிறகு நாட்டில் பணப்புழக்கம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆண்டுதோறும் ஆர்பிஐ வெளியிடும் ரூபாய் நோட்டுகளின் அளவும், தற்போதைய பணப்புழக்கமும் கணிசமாக உயர்ந்தேயிருக்கிறது.
மேலும், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்கான அடித்தளமும் அப்போதே வித்திடப்பட்டது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக முன்னேறி வருகிறது.
அமைப்புசாரா, சிறு தொழில்கள், வியாபாரிகளிடமிருந்து இன்று வரை பணத்தை பிரிக்க முடியாமல் இருப்பதே, பணப்புழக்கமும் அதிகரித்திருப்பதற்குக் காரணமாக உள்ளது.
Summary
10 years since demonetization! What was expected and what was not!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

