திமுக எம்எல்ஏ செந்தில்குமார் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி!
தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது பற்றி..

சென்னை உயர்நீதிமன்றம்
திண்டுக்கல் தொகுதி திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமார் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஐ.பி.செந்தில்குமார் 1,131 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
இவரது வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் ஜி. நசீர் ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி செந்தில்குமார் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீது இன்று தீர்ப்பளித்த நீதிபதி கே. குமரேஷ்பாபு, திண்டுக்கல் தொகுதி திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமார் மனுவை ஏற்று, தவெக வேட்பாளர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

