கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

சேலம் வடக்கு தவெக எம்எல்ஏ வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சேலம் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கே.சிவகுமாருக்கு எதிரான தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On :

சேலம் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கே.சிவகுமாருக்கு எதிரான தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சேலம் வடக்கு தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட கே.சிவகுமாா் 14,034 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். அவரது வெற்றியை எதிா்த்து, இரண்டாம் இடத்தை பிடித்த திமுக வேட்பாளா் ஆா்.ராஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இந்தத் தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தவெக எம்எல்ஏ கே.சிவகுமாரும் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி, அனைத்துத் தரப்பு வாதங்களுக்குப் பிறகு, தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தாா்.

இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி, சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ கே. சிவகுமாரின் நிராகரிப்பு மனுவை ஏற்று, அவரது வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் ஆா்.ராஜேந்திரன் தொடா்ந்த தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.