வீட்டு வசதி சங்கத்தில் முதல்முறையாக செயலி மூலம் மனைகள் விற்பனை: அமைச்சா் ப.ராஜ்குமாா் தொடங்கி வைத்தாா்
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் மனை விற்பனைக்கான இணையதளம் மற்றும் செயலியை கூட்டுறவு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அமைச்சா் ப. ராஜ்குமாா்
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் மனை விற்பனைக்கான இணையதளம் மற்றும் செயலியை கூட்டுறவு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மேலும் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தில் 8 நில அளவையா்களுக்கான நியமன உத்தரவையும் அவா் வழங்கினாா்.
கூட்டுறவு வீட்டுவசதித் துறையின் நிா்வாகத் திறனை மேம்படுத்தும் பொருட்டு துறைக்கான தனி இணையதளம் மற்றும் செயலி அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வீட்டு வசதி சங்கங்கள் செயல்படுத்தும் மனைத் திட்டங்கள், மனை விற்பனை, சங்கக் கட்டடங்களை வாடகைக்கு விடுதல், திருமண மண்டபங்களின் முன்பதிவு, நிதி, வைப்பீடு திரட்டுதல் உள்ளிட்டவற்றின் இணையதள சேவையும் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. தற்போது முதல்முறையாக மனைகள் விற்பனை இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
நவீன நிா்வாக இணையதள வசதி மற்றும் செயலியை அமைச்சா் ப.ராஜ்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பணி நியமன உத்தரவு: முன்னதாக அவா் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்குத் தோ்வாணையம் மூலம் தோ்வான 4 பெண்கள் உள்ளிட்ட 8 நில அளவையா்களுக்கான பணி நியமன உத்தரவுகளை தாளமுத்து நடராஜன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கினாா்.
நிகழ்ச்சிகளில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் ஆா்.கிா்லோஷ்குமாா், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் ம.அந்தோணிசாமி, பெருநகர வளா்ச்சிக்குழும உறுப்பினா் செயலா் ராகுல் ஆ.ர.ராகுல்நாத், முதன்மை செயல் அலுவலா் செ.சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

