தனி விமானத்தில் தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்!நடிகை த்ரிஷா திருமணம் எப்போது? பிரபல பெண் ஜோதிடர் வெளியிட்ட கணிப்பு!ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்த பயணிகள்! ஒருவர் பலி!திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து! 92,000 விவசாயிகள், ஆசிரியர்கள் விடுவிப்பு!அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும்? வெளியான அதிர்ச்சித் தகவல்!கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு நவ. 16 வரை நீதிமன்றக் காவல்! ஐசிசி தலைவராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு!ஜார்க்கண்ட் நிலக்கரிச் சுரங்கம்!அபாயத்தில் 6 லட்சம் மரங்களும் யானைகள் வாழ்விடமும்!!மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!குற்றவாளிகளின் ‘ஹோல்சேல்’ கூடாரமாக தவெக! மு.க. ஸ்டாலின்மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கு: நிஷாந்த் கைது

பெரியார் அறிவுலக ஊழல்: தமிழகத்தில் 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை!

கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக 2 -வது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை....

Periyar arivulagam

பெரியார் அறிவுலகம். - DNS

Updated On :

கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக 2 -வது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்திற்காக நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில், தகுதியற்ற போலி புத்தகங்கள், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள், போலி நூலாசிரியர்கள் மற்றும் போலியான பதிப்பகங்கள் வாயிலாகப் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன.

புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று இரண்டாவது முறையாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் வீடு, திருவாரூரில் உள்ள அவரது அலுவலகம், கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம், நூலகம், காஞ்சிபுரம், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் உள்ள அரசு நூலகங்கள் உள்பட 7 இடங்களில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு, கொள்முதல் குழுவில் இடம்பெற்றிருந்த முக்கிய நபர்களுக்கு நேரில் ஆஜராக காவல் துறை சம்மன் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

periyar arivulagam books procurement row: DVAC raids 7 places in tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.