கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பது பற்றி...

கோவை.
சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 21-ஆம் தேதி கோவை, சூலூரை அடுத்துள்ள கண்ணம்பாளையம் பகுதியில் தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், கண்ணம்பாளையம் குளம் அருகேயுள்ள தென்னந்தோப்புப் பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேதப் பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது. இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகச் சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது, அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து கீழே குதித்துத் தப்பிக்க முயன்ற கார்த்திக்கிற்கு வலது கை மற்றும் வலது கால் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. சிறுமிக்குக் கடையில் சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, கார்த்திக் தனது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
அன்றைய தினம் தமிழகக் காவல்துறை டி.ஜி.பி.-யாகப் பதவி வகித்த சந்தீப் ராய் ரத்தோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு நடத்தி விசாரணையைத் துரிதப்படுத்தினார். வழக்கின் தீவிரம் கருதி காவல்துறையினர் மிக விரைவாகச் செயல்பட்டு, சம்பவம் நடந்த 21 நாட்களில் 819 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் முக்கிய ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.
கோவை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் முன்னிலையில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 221 முக்கிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று (நவம்பர் 16) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் தீர்ப்பை வரும் நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஹரிஹரன் உத்தரவிட்டார்.
Summary
The verdict has been postponed in the case of a 10-year-old girl who was sexually assaulted and murdered in Sulur.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


